search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம்சங் வின்னர்"

    சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் மற்றும் புதிய குவால்காம் சிப்செட் விவரங்கள் தெரியவந்துள்ளது. #smartphone #WINNER



    சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனிற்கான ஆன்ட்ராய்டு பை ஃபர்ம்வேர் லீக் ஆகியுள்ளது. இதில் வெளிவர இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் குறியீட்டு பெயர் தெரியவந்துள்ளது.

    அதன்படி சாம்சங் நிறுவனத்தின் முதல் மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் வின்னர் என அழைக்கப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குறித்து சாம்சங் ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், இதன் வெளியீட்டு தேதி மட்டுமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஸ்மார்ட்போனின் சில சிறப்பம்சங்கள் வெளியாகி இருக்கிறது. 

    அந்த வகையில் மடிக்கக்கூடிய சாம்சங் ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா செட்டப், OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் சாம்சங்கின் வின்னர் ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் ரகசிய அரங்கில் சிலருக்கு மட்டும் காண்பிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.



    ப்ரோடோடைப் சானத்தில் 3.5 இன்ச் அளவுகளில் மூன்று OLED பேனல்களை கொண்டிருக்கிறது. இதில் இரண்டு பேனல்களை இணைத்தால் ஸ்மார்ட்போன் திறந்த நிலையில் 7.0 இன்ச் ஸ்கிரீன் உருவாகிறது, இதன் மூன்றாவது பேனல் வெளிப்புறம் இருக்கிறது. ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் பார்க்க கேலக்ஸி நோட் 8 போன்று காட்சியளிக்கிறது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டது.

    ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்து அதிகப்படியான விவரங்கள் வெளியாகாத நிலையில், இதன் விலை 2000 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. ஸ்மார்ட்போனின் பெயர் வின்னர் எல்.டி.இ. என்றிருப்பதால், இதில் எக்சைனோஸ் சிப்செட் கொண்டிருக்கிறது. இதன் குவால்காம் ஸ்னாப்டிராகன் வேரியன்ட் வின்னர் கியூ.எல்.டி.இ. என பெயரிடப்பட்டு இருக்கும். அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனில் எக்சோனோஸ் 9810 அல்லது எக்சைனோஸ் 9820 பிராசஸர் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதே தரவுகளில் வெளியிடப்படாத குவால்காம் ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் சார்ந்த விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரின் விளம்பர பெயர் தான் ஸ்னாப்டிராகன் 8150 என ஏற்கனவே தகவல்கள் வெளியானது. மேலும் ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் பிரத்யேக NPU கொண்ட முதல் குவால்காம் பிராசஸராக இருக்கும் என கூறப்பட்டது.
    ×